
அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ் சொல்வது போல ஒரு வசனம் வரும்
''இந்த கேஸ்ல இருந்து நிறைய விஷயங்கள் வெளிவரும் போல இருக்கே...'' என்று.
அது போலத்தான் இருக்கிறது நித்தியானந்த விவகாரம்.
ஒரு நாள் விடிவதே நித்தியானந்தாவின் பெயரை சொல்லித்தான்.
நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் எதுவாக இருந்தால் என்ன?
'நித்தியானந்தா நமஹா' தான்.
அதிலும் இந்த பிளாக்கர் பசங்களுக்கு நித்தியானந்தா ஒரு அட்சய பாத்திரம்....
எப்படிப்பார்த்தாலும் அண்ணன் குத்து மன்னிக்கவும் குடுத்து வைத்தவர்.
திருவண்ணாமலையில் ஒரு சாதாரண இளைஞனாக இருந்தவர் இப்போது பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி.
எண்ணெய் தேய்த்து விட ரஞ்சிதாவும் ஏனைய பெண்களும்.
அப்பப்பா என்ன வளர்ச்சி..
எதோ பொறாமையில் உளறி விட்டேன் அதை விடுங்கள்...
நான் சொல்ல வந்தது என்னவென்றால்,
ரஞ்சிதாவுடன் தான் இருந்தது சமாதி நிலையில் என்று பாஸ் ஒரு புதுக்கதையை கொளுத்தி போட்டு இருக்கிறார்.
நித்தியானந்தா ஆங்கில தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார். அதில்தான் இந்த சரவெடி.
ஹரித்வாரில் கும்பமேளாவில் இருந்து இந்த பேட்டி கொடுத்ததாக சொல்றாங்க..யாருக்கு தெரியும் பாஸ்??
ஆனால் அவர் சொல்லும் கதையை கேட்டால் மயிர் மன்னிக்கவும் மெய் சிலிர்கிறது..
''நடிகை ரஞ்சிதா எனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன்.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளில் நிறைய தவறான சித்தரிப்புகள், இடைச்செருகல மற்றும் 'மார்ஃபிங்' நடந்துள்ளன.
வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.
அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் பிரக்ஞையற்ற நிலையில் இருந்தேன்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை திரிக்கப்பட்டும், தவறானதாகவும் சித்தரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. எனது 'பிரைவசி' பறிபோயுள்ளது.
அதோடு நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைக் கூட மீடியாக்கள் படமெடுத்துள்ளன. இது நிச்சயமாக என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடந்துள்ளது''
வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். நடிகை ரஞ்சிதா உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா? என்று கேள்விக்கு தலைவரின் பதிலை பாருங்கள்..
''ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா நேற்றும் இன்றும் நாளையும் எனது தீவிர பக்தைதான். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள்.
ரஞ்சிதா எனக்கு நீண்ட காலமாக எனக்கு சேவை செய்பவர். அந்த காலகட்டத்தில் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். நீண்ட நாள்கள் அப்படியிருந்தேன். அப்போது அவர் தான் என்னை முழுவதுமாக மனமுவந்து கவனித்துக் கொண்டார்.
அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.
சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன்.
முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.
எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், தாழ்வையும் தொட்டுவிட்டேன்.
இவை எனக்கு வாழ்க்கையின் இதர பரிமாணங்களை கற்றுத் தந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கண்டுவருகிறேன்.
எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை உருவாகும் என்றோ, என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.
இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை தான் எனக்கு ஆறுதல்.எனது நிலையை சீடர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஹரித்வாரில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை.
நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. கும்பமேளாவில் எனது கடமைகள் முடிந்தபின் நான் பெங்களூர் ஆஸ்ரமத்துக்குத் திரும்புவேன்.
இந்த வழக்கு தொடர்பாகவோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கவோ போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை'' என்று கூறியிருக்கிறார் நம்ம தலைவர்.
கடவுளை நம்புபவர்கள் சாமியார்களை நம்புபவர்கள் இதை வாசித்தால் தொடர்ந்து துறவறம் பற்றி பாஸ் சொன்னதையும் பாருங்கள்...
''பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன்.
அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் பிரக்ஞையுடன் உங்களுக்கு 'பயோ-மெமரி' அதிகளவில் இருக்குமானால், மற்றவர்களின் தேவை குறைவானதாக இருக்கும்.
உங்களது பயோ- மெமரி வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.
எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.
இந்த வீடியோ எனக்கு எதிரான மிகப் பெரிய சதி. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரத்தத்தை வைத்து ரத்தத்தைக் கழுவ முடியாது.
எனது பல்வேறு சேவைகளை கருத்தில்கொண்டு இதனை சமுதாயம் நிராகரித்திருக்க வேண்டும்.
விரைவில் பெங்களூருக்கு வருவேன்''
-கில்மானந்தா
Sunday, 14 March 2010

நித்தியானந்தா விடியோ வந்த பிறகு பல வீடுகளிலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தேன்கூடு விற்கு தகவல்கள் வந்துள்ளன. ரஞ்சிதா நித்தியானந்தாவிற்கு செய்யும் பணிவிடைகளை பார்த்த எமது கணவர் குல மாணிக்கங்கள் வீட்டில் போய் தொண தொணப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன.
''ம்ம்ம்ம் அவளவள் எப்படி புருஷனை கவனிக்கிறாள் (சாமியார் என்று சொல்ல முடியாதே..)
காலையில் எழுப்பி காப்பி கொடுப்பதிலிருந்து எத்தனை சேவைகள்...... அந்த எண்ணெய் எண்ணெய் மசாஜ் ....சான்சே இல்லை. ம்ம்ம் நம்ம பொழப்ப பாரு.....''
''ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்...மாய்ஞ்சு ..மாய்ஞ்சு..எல்லாம் செய்தும் ஒரு நல்ல பேரு இல்லை...'' என்று மனைவிமார் சொன்னாலும்..
அந்த வீடியோவை மனதில் மீண்டும் ஒரு தரம் ஓட்டிப்பார்த்து விட்டு..
'' ம்ம் ...அந்த கொடுப்பினை நமக்கு இல்லை.....'' என்று பொறாமையில் புழுங்க..
'' என்ன வந்ததிலிருந்தே பார்க்க கூடாதத பார்த்த மாதிரி ஒரு மார்க்கமா இருக்கீங்களே...என்னாச்சு உங்களுக்கு...? எந்த கொடுப்பினை உங்களுக்கு இல்லை??? '' என்று முறைக்கும் மனைவியிடம் உண்மையை சொல்லவா முடியும்?
அடுத்த ஜென்மத்திலாவது நான் சாமியாராக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத்தவிர எமது பாவப்பட்ட கணவன்மாருக்கு வேறு என்ன வழி இருக்கிறது?
- கில்மானந்தா


வாயிருந்தா வங்காளம் போகலாம் என்று முன்பு சொல்வார்கள். ஆனால் ஸ்ரீரங்கா வைகுந்தமே போவார் போல.
மின்னல் நிகழ்ச்சியில் தமிழருக்காக வாதாடுவார். ஏற்கனவே எழுதி பாடமாக்கி வந்ததை விரைவாக வாந்தி எடுத்து விட்டு சண்டையை மூட்டி விட்டு பின்னர் விலக்குவதுதான் அவரது வேலை. இதை பார்க்கும் நமது பன்னாடைகள் ''ரங்கா சும்மா வெளுத்து வாங்கிறான்'' என்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரியாது நிகழ்ச்சி முடிய ரங்கா மகிந்தவை பார்க்க போய்விடுவார் என்று.
மகிந்தவுக்கு சேவை செய்வதே ரங்காவின் உண்மையான வேலை.
தமிழ் தேசியம் எல்லாம் ச்சும்மா.. ச்சும்மா..
ரங்கா ஆரம்பத்தில் டக்லஸ் தேவானந்தாவுடன் நெருக்கமாக இருந்தார். அப்போது மகிந்த மீன்பிடி வளத்துறை அமைச்சராக இருந்தார். மகிந்தவிற்கு தமிழில் சில வேலைகளை செய்ய ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டார். அப்போது டக்லஸ் அனுப்பிய ஆள்தான் ரங்கா.
அதன் பின்னர் படிப்படியாக கூஜா தூக்கி மகிந்தவின் பிரியத்தை பெற்று விட்டார். மகிந்தவிற்கு அவர் வேறு என்ன சேவைகள் செய்தார் என்பதெல்லாம் இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்காது. அது நமக்கு தேவையும் இல்லை.
ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே தமிழருக்கு எதிராக செயல்படுவது மிகவும் கேவலமான செயல் என்பதை அவர் ஏன் உணர மறுக்கிறார் என்பதுதான் வேதனையானது. மேலும் அவர் விடுதலைப்புலிகள் குறித்து பல உளவு தகவல்களை அரச படையினருக்கு வழங்கியதாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்பது அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.
இப்போது மகிந்தவின் மகனுக்கு தமிழ் மக்களை கவர தேவையான ஆலோசனைகளை வழங்குவது அண்ணர்தான்.
பாவம் தமிழர்கள் எத்தனை துரோகத்தை தான் தாங்குவது...?
ரங்காவின் துரோகம் பற்றி இந்த தளத்திலும் வந்துள்ளது- http://meenakam.com
சுதன்

