
நித்தியானந்தா விடியோ வந்த பிறகு பல வீடுகளிலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தேன்கூடு விற்கு தகவல்கள் வந்துள்ளன. ரஞ்சிதா நித்தியானந்தாவிற்கு செய்யும் பணிவிடைகளை பார்த்த எமது கணவர் குல மாணிக்கங்கள் வீட்டில் போய் தொண தொணப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன.
''ம்ம்ம்ம் அவளவள் எப்படி புருஷனை கவனிக்கிறாள் (சாமியார் என்று சொல்ல முடியாதே..)
காலையில் எழுப்பி காப்பி கொடுப்பதிலிருந்து எத்தனை சேவைகள்...... அந்த எண்ணெய் எண்ணெய் மசாஜ் ....சான்சே இல்லை. ம்ம்ம் நம்ம பொழப்ப பாரு.....''
''ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்...மாய்ஞ்சு ..மாய்ஞ்சு..எல்லாம் செய்தும் ஒரு நல்ல பேரு இல்லை...'' என்று மனைவிமார் சொன்னாலும்..
அந்த வீடியோவை மனதில் மீண்டும் ஒரு தரம் ஓட்டிப்பார்த்து விட்டு..
'' ம்ம் ...அந்த கொடுப்பினை நமக்கு இல்லை.....'' என்று பொறாமையில் புழுங்க..
'' என்ன வந்ததிலிருந்தே பார்க்க கூடாதத பார்த்த மாதிரி ஒரு மார்க்கமா இருக்கீங்களே...என்னாச்சு உங்களுக்கு...? எந்த கொடுப்பினை உங்களுக்கு இல்லை??? '' என்று முறைக்கும் மனைவியிடம் உண்மையை சொல்லவா முடியும்?
அடுத்த ஜென்மத்திலாவது நான் சாமியாராக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத்தவிர எமது பாவப்பட்ட கணவன்மாருக்கு வேறு என்ன வழி இருக்கிறது?
- கில்மானந்தா
Sunday, 14 March 2010

