

வாயிருந்தா வங்காளம் போகலாம் என்று முன்பு சொல்வார்கள். ஆனால் ஸ்ரீரங்கா வைகுந்தமே போவார் போல.
மின்னல் நிகழ்ச்சியில் தமிழருக்காக வாதாடுவார். ஏற்கனவே எழுதி பாடமாக்கி வந்ததை விரைவாக வாந்தி எடுத்து விட்டு சண்டையை மூட்டி விட்டு பின்னர் விலக்குவதுதான் அவரது வேலை. இதை பார்க்கும் நமது பன்னாடைகள் ''ரங்கா சும்மா வெளுத்து வாங்கிறான்'' என்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரியாது நிகழ்ச்சி முடிய ரங்கா மகிந்தவை பார்க்க போய்விடுவார் என்று.
மகிந்தவுக்கு சேவை செய்வதே ரங்காவின் உண்மையான வேலை.
தமிழ் தேசியம் எல்லாம் ச்சும்மா.. ச்சும்மா..
ரங்கா ஆரம்பத்தில் டக்லஸ் தேவானந்தாவுடன் நெருக்கமாக இருந்தார். அப்போது மகிந்த மீன்பிடி வளத்துறை அமைச்சராக இருந்தார். மகிந்தவிற்கு தமிழில் சில வேலைகளை செய்ய ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டார். அப்போது டக்லஸ் அனுப்பிய ஆள்தான் ரங்கா.
அதன் பின்னர் படிப்படியாக கூஜா தூக்கி மகிந்தவின் பிரியத்தை பெற்று விட்டார். மகிந்தவிற்கு அவர் வேறு என்ன சேவைகள் செய்தார் என்பதெல்லாம் இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்காது. அது நமக்கு தேவையும் இல்லை.
ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே தமிழருக்கு எதிராக செயல்படுவது மிகவும் கேவலமான செயல் என்பதை அவர் ஏன் உணர மறுக்கிறார் என்பதுதான் வேதனையானது. மேலும் அவர் விடுதலைப்புலிகள் குறித்து பல உளவு தகவல்களை அரச படையினருக்கு வழங்கியதாகவும் சொல்கிறார்கள். உண்மை எது என்பது அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்.
இப்போது மகிந்தவின் மகனுக்கு தமிழ் மக்களை கவர தேவையான ஆலோசனைகளை வழங்குவது அண்ணர்தான்.
பாவம் தமிழர்கள் எத்தனை துரோகத்தை தான் தாங்குவது...?
ரங்காவின் துரோகம் பற்றி இந்த தளத்திலும் வந்துள்ளது- http://meenakam.com
சுதன்
Sunday, 14 March 2010

